என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுச்சேரியில் இன்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,832 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 687 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,84,281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,58,140 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 11,194 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,56,369 பேருக்கும், டெல்லியில் 1,18,645 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,832ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×