என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பணைகள் கட்டும் பணியை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
    X
    தடுப்பணைகள் கட்டும் பணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

    2 தடுப்பணைகள் கட்டும் பணியை அமைச்சர் ஆய்வு

    குண்டேரிப்பள்ளம் அணையில் 2 தடுப்பணைகள் கட்டும் பணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
    டி.என்.பாளையம்:

    கோபி அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. பொதுப்பணித்துறை சார்பில் இந்த அணையின் உபரி நீர் செல்லும் வழியில் 2 இடங்களில் ரூ.5 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்படுகிறது. இதில் கொங்கர்பாளையத்தில் ரூ.3 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது. இந்த பணி 90 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், பள்ளிக் கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சருடன் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இருந்தனர்.
    Next Story
    ×