என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அருண்
    X
    கலெக்டர் அருண்

    கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து இ-பாசுடன் மருத்துவ சிகிச்சைக்கு வந்தால் அனுமதி- கலெக்டர்

    கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து இ-பாசுடன் மருத்துவ சிகிச்சைக்கு வந்தால் அனுமதி அளிக்கப்படும் என்று புதுவை மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
    பாகூர்:

    புதுவை - கடலூர் சாலையில் மாநில எல்லையான முள்ளோடையில் போலீசாரின் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்த புதுவை மாவட்ட கலெக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஜிப்மர் உள்பட 7 மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வருகின்றனர். மருத்துவத்திற்காக வருபவர்களை தடுத்து நிறுத்தவில்லை. கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று மருத்துவத்திற்காக வருபவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் இல்லாமல் மருத்துவத்திற்காக வருபவர்கள் திருப்பி அனுப்புகிறோம்.

    இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.
    Next Story
    ×