என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கந்தசாமி
    X
    அமைச்சர் கந்தசாமி

    ஏம்பலம் தொகுதியில் நடமாடும் ஏடிஎம் சேவை- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வங்கி சேவையை பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து ஏம்பலம் தொகுதியில் நடமாடும் ஏடிஎம் சேவையை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

    இதனால் வங்கி சேவையை பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து, புதுவை பாரதியார் கிராம வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த சேவையை ஏம்பலம் தொகுதி மக்கள் பெரும் வகையில் பனித்திட்டு கிராமத்திற்கு நடமாடும் ஏ.டி.எம். சேவை அளிக்கும் வேன் கொண்டு வரப்பட்டது. இதில் பண பரிவர்த்தனையை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். பாரதியார் கிராம வங்கி தலைவர் மார்க்கரேட் லெடிஷியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வம்பாபேட்டில் 100 நாள் வேலை செய்த தொழிலாளர்கள், பனித்திட்டு கிராம மீனவர்கள் நீண்ட தூரம் சென்று வங்கியில் பணம் எடுப்பதற்கு பதிலாக, நடமாடும் ஏ.டி.எம். வாகனத்தின் மூலமாக தங்களது வங்கி கணக்கில் இருந்து தேவையான பணத்தை எடுத்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து, பனித்திட்டு, நரம்பை மீனவ கிராமங்களில் மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில், மீன் வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, உதவி இயக்குனர் தனசேகர், பாரதியார் கிராம வங்கி சேர்மன் மார்க்கரேட் லெடிஷியா, நடமாடும் ஏ.டி.எம். பிரிவு பொறுப்பாளர் கிருத்திகா, தொழில் நுட்பபிரிவு மேலாளர் பிரபு, மாவட்ட தொழில் பயிற்சி மைய இயக்க மேலாளர் குமார், கதர் கிராம வாரிய துணை செயல் அதிகாரி கணேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், வட்டார வளர்ச்சி அதிகாரி மலர், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல், மற்றும் மீனவ கிராம முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×