search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும்- நாராயணசாமி

    மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும் என்ற நிலையில் புதுவையிலும் மதுக்கடைகளை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஊரடங்கு தளர்வுக்கு பின் கடைகளில் கடந்த 2 தினங்களாக இருந்த கூட்டம் இல்லை. ஆனால் மக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த நேரம் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட உள்ளது.

    மக்கள் சிரமத்தை போக்கவும், பலரும் பாதிப்படையாமல் இருக்க தனிமைப்பட்ட பகுதிகள் எவை என்பதை அறிவிக்கும் உரிமையை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    புதுவை மக்களின் பாதுகாப்பும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் முக்கியம். தமிழகத்தின் முடிவை பொருத்தே புதுவையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழல் உள்ளது.

    தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும் என்ற நிலையில் புதுவையிலும் மதுக்கடைகளை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரவையை கூட்டி முடிவை அறிவிப்போம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    Next Story
    ×