என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
4 மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.13.4 கோடிக்கு மது விற்பனை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.13.4 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்திற்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் வேலூர் மாவட்டத்தில் 72 கடைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் 46 கடைகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்டம் அலைமோதியது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.5 கோடிக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.3 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 215 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளைத் தவிர்த்து மீதமுள்ள 149 கடைகள் திறக்கப்பட்டன.
நேற்று மட்டும் இந்த டாஸ்மாக் கடையில் ரூ.5 கோடிக்கு மது விற்பனையானது. வழக்கமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.3 கோடி வரை விற்பனையாகும் நேற்று கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
4 மாவட்டத்திலும் மொத்தம் ரூ.13.4 கோடிக்கு நேற்று ஒரே நாளில் மது விற்பனையாகி உள்ளது.

Next Story