search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லிக்குப்பத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற குடையுடன் கடைக்கு வந்த பொதுமக்கள்.
    X
    நெல்லிக்குப்பத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற குடையுடன் கடைக்கு வந்த பொதுமக்கள்.

    குடையுடன் வந்தால்தான் பொருட்கள் கிடைக்கும்- நெல்லிக்குப்பம் போலீசார் அறிவிப்பு

    கேரளா மாநிலத்தில் உள்ளதுபோல் குடையுடன் வந்தால்தான் பொருட்கள் கிடைக்கும் என்று நெல்லிக்குப்பம் போலீசார் அறிவித்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் பொதுமக்கள் கூடுகின்றனர்.

    அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். இதனை சரி செய்வதற்காக நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, கேரளா மாநிலத்தில் உள்ளதுபோல் பொதுமக்கள் கடைக்கு வரும்போது கட்டாயம் குடையை எடுத்து வர வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

    குடை எடுத்து வந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும். இல்லையெனில் கடை சீல் வைக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்தார்.

    குடையுடன் வருபவர்கள் எப்படியும் சமூக இடைவெளியை கடைபிடிப்பார்கள் என்ற நோக்கத்தில் போலீசார் இந்த முறையை கையாண்டுள்ளனர். அதன்படி நெல்லிக்குப்பம் பகுதியில் பொதுமக்கள் கடைக்கு வரும்போது குடையுடன் வந்து சமூக இடைவெளியை கடை பிடித்தனர்.
    Next Story
    ×