என் மலர்
செய்திகள்

வாகனம் மூலம் ரூபாய் 100/-க்கு அனைத்து காய்கறிகள் விற்பனை.
ரூ. 100-க்கு அனைத்து காய்கறிகள்: புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் முயற்சிக்கு மக்கள் பாராட்டு
ஊரடங்கு உத்தரவு காரணமாக ரூ. 100-க்கு அனைத்து காய்கறிகள் அவரவர் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் என்று புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை
மக்களை கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வெளியில் வருவதை தவிர்க்கும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆலோசனையின் பேரில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் ஏற்பாட்டில் நகர் முழுவதும் நகராட்சி வாகனம் மூலம் ரூபாய் 100/-க்கு அனைத்து காய்கறிகள், தேங்காய் முதற்கொண்டு அவரவர் இல்லப்பகுதிகளுக்கே சென்று துணிப்பையில் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். இதனை அந்தந்த பகுதி மக்கள் ரூபாய் 100/-கொடுத்து வாங்கி செல்கிறார்கள்.

இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் நகராட்சி நிர்வாகத்தின் இப்பணியை பாராட்டுவதோடு மட்டுமின்றி நன்றியும் தெரிவித்துள்ளனர்.
Next Story






