search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 2 வாலிபர்களுக்கு நூதன தண்டணை
    X
    ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 2 வாலிபர்களுக்கு நூதன தண்டணை

    புதுவையில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 2 வாலிபர்களுக்கு நூதன தண்டணை

    புதுவையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 2 வாலிபர்களுக்கு நூதன தண்டணையை வழங்கி போலீசார் எச்சரித்தனர்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்தநிலையில் புதுவையிலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் போலீசார் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி என்ன காரணத்திற்காக வெளியில் வந்தீர்கள் என விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மரக்காணத்தை சேர்ந்தவர்கள் என்பதும் புதுவையை சுற்றி பார்க்க வந்தாகவும் தெரிவித்தனர்.

    இதனை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி கண்டித்தார். மேலும் அவர்களுக்கு தண்னை வழங்கும் விதமாக 21 தோப்பு கரணம் போடும் படி கூறினார்.அந்த வாலிபர்களும் 21 தோப்புகரணம் போட்டனர்.பின்னர் அவர்கள் ஒட்டி வந்த மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததோடு அவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் அந்த வாலிபர்கள் தோப்புகரணம் போடும் வீடியோ சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.
    Next Story
    ×