என் மலர்

    செய்திகள்

    மும்தாஜ்.
    X
    மும்தாஜ்.

    செங்கோட்டையில் பணத்திற்காக பாட்டியை அடித்து கொன்ற ஆட்டோ டிரைவர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செங்கோட்டையில் இன்று அதிகாலை பணம் தராததால் ஆட்டோ டிரைவர் பாட்டியை அடித்துக்கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த விஸ்வநாதபுரம் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி மும்தாஜ் (வயது 65). இவர்களுக்கு அசன் ஷா என்ற மகன் உள்ளார். இதில் முகமது யூசுப் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மும்தாஜ் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    மும்தாஜின் பேரன் அப்துல் சலாம்(25). இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது பாட்டியிடம் அடிக்கடி பணம் கேட்டு பெற்று செல்வதாக தெரிகிறது. நேற்றும் வழக்கம்போல் அப்துல் சலாம் தனது பாட்டியிடம் பணம் கேட்க சென்றுள்ளார்.

    அப்போது மும்தாஜ் தனக்கு வயதாகிவிட்டது. எனக்கு நீதான் பணம் தந்து உதவ வேண்டும். ஆனால் நீ என்னிடம் கேட்கிறாயே என்று கூறியுள்ளார். ஆனால் அப்துல் சலாம் அதை கேட்க மறுத்துள்ளார். மேலும் தனக்கு கண்டிப்பாக பணம் தரவேண்டும் என்று கூறி சண்டை போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பாட்டி வீட்டில் உள்ள கட்டில், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை கேட்டும் அவர் சண்டை போட்டுள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் ஆத்திரம் தீராத அப்துல் சலாம் இன்று அதிகாலை பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்துல் சலாம் கோபத்தில் வீட்டில் இருந்த கிரைண்டர் உள்ளிட்டவைகளை தள்ளிவிட்டுள்ளார். மேலும் தனது பாட்டியையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் மும்தாஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    மும்தாஜ் இறந்துவிட்டதை அறிந்த அப்துல் சலாம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இன்று காலை வெகுநேரமாகியும் மும்தாஜ் வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மும்தாஜ் பிணமாக கிடந்தார். உடனே அவர்கள் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் மும்தாஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பாட்டியை அடித்து கொன்றுவிட்டு தப்பியோடிய அப்துல் சலாமை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×