என் மலர்
செய்திகள்

இளம்பெண் கற்பழிப்பு
இளம்பெண்ணை 2 நாட்களாக அடைத்து வைத்து கற்பழித்த தொழிலாளி
புதுக்கோட்டை அருகே உணவு வழங்காமல் 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை கட்டிட தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த கண்ணன்-செல்லாயி தம்பதியரின் மகள் தனலட்சுமி (வயது 20). இவர் கடந்த 24-ந்தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு திடீரென மாயமாகி விட்டார்.
அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீசில் புகார் செய்ய முடிவு செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (40) என்பவர், தனலட்சுமியின் சகோதரரை தொடர்பு கொண்டு, உனது தங்கை எனது வீட்டில்தான் உள்ளார் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமியின் சகோதரர் மற்றும் பெற்றோர், உறவினர்கள் சுரேசின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள ஒரு அறையில் தனலட்சுமி மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தனலட்சுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தனலட்சுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் சுரேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. சுரேசுக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஒரே பகுதியில் வசித்து வந்ததால் தனலட்சுமி மீது சுரேசுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24-ந்தேதி இரவு தனலட்சுமி வீட்டை விட்டு தனியாக வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட சுரேஷ், தனலட்சுமியின் வாயை பொத்தியதுடன், அவரை தனது வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 2 நாட்களும் உணவு வழங்காமல் தனலட்சுமியை பாலியல் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

உணவு வழங்காமல் 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை கட்டிட தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனலட்சுமியை அவரது பெற்றோர் தேடி வந்த நிலையிலும் சுரேஷ் தனது வீட்டில் மறைத்து வைத்திருப்பதை தெரிவிக்காமல் ஹாயாக அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். கடைசியில் போலீசில் புகார் தெரிவிக்க இருப்பதாக தகவல் கிடைக்கவே, போலீசாருக்கு பயந்து தனலட்சுமியை தனது வீட்டில் அடைத்து வைத்துள்ள தகவலை தனலட்சுமியின் சகோதரரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான சுரேசை தேடி வருகின்றனர்.

Next Story