search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழையால் கோவில் முன்பு மழை தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ள காட்சி
    X
    தொடர் மழையால் கோவில் முன்பு மழை தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ள காட்சி

    வேலூரில் விடிய விடிய மழை

    வேலூரில் பெய்துவரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூரில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. அதைத் தொடர்ந்து இரவில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய கொட்டியது.

    இடைவிடாது பெய்த பலத்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், காவேரிப்பாக்கம், ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர் பகுதியில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்தது. இன்று காலையிலும் மழை பெய்தது. அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 78 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வேலூர், காட்பாடி, 54 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் விடிய விடிய பரவலாக மழைபெய்து வருகிறது. ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சாத்தனூர் அணை, போளூர், வெம்பாக்கம் பகுதியில் மழை கொட்டியது.

    அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 78 மி.மீ மழை கொட்டியுள்ளது.

    சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையில் 94.25 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 382 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் குப்பநத்தம், செண்பகத்தோப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


    Next Story
    ×