என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை பணிகளை கொட்டும் மழையில் ஆய்வு செய்தார்.
    X
    காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை பணிகளை கொட்டும் மழையில் ஆய்வு செய்தார்.

    மகாபலிபுரத்தில் 42 மி.மீட்டர் மழை

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பட்சமாக மாமல்லபுரத்தில் 42.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்தது.

    காஞ்சிபுரத்தில் நேற்று இரவு 10 மணி முதல் தொடர்ந்து நல்ல சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளான கங்கைகொண்டான் மண்டபம், மேட்டுத்தெரு, காந்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மாமல்லபுரத்தில் 42.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சிபுரம்- 4.2
    செங்கல்பட்டு- 18.42
    ஸ்ரீபெரும்புதூர்- 6.4
    திருக்கழுக்குன்றம்- 28.2
    திருப்போரூர் - 16.5
    மகாபலிபுரம் - 42.2

    இதற்கிடையே காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் பா. ‌பொன்னையா இன்று காலை திடீர் ஆய்வு செய்தார்.

    கொட்டும் மழையில் அவர் குடைபிடித்தப்படி மழை நீர் வெளியேறி செல்லும் வேகவதி ஆறு கால்வாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார்.

    அப்போது அங்கு கரையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இதே போல் காவலன் கேட், ஓரிக்கை, சின்னையன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் செல்ல பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது காஞ்சிபுரம் பெருநகராட்சி பொறுப்பு ஆணையர் மகேந்திரன், நகர்நல அலுவலர் முத்து மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×