search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிங்ஸ் கல்லூரியின் கண்டுபிடிப்புக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினர்
    X
    கிங்ஸ் கல்லூரியின் கண்டுபிடிப்புக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினர்

    இயற்கை சீற்றத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி- கிங்ஸ் கல்லூரியின் கண்டுபிடிப்புக்கு பரிசு

    இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிவிப்பதற்கான அரிய வகை கருவியை கண்டுபிடித்துள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரிக்கு பரிசு வழங்கப்பட்டது.
    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இன்று கம்ப்யூட்டிங் கம்யூனிகேஷன் மற்றும் நெட்வொர்க்கிங் டெக்னாலஜிஸ் (ஐ.சி.ஆர்.டி.சி.சி.என்.டி.) தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பல கல்வி நிறுவனங்களில் இருந்து 196 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. அதில் 127 கட்டுரைகள்  ஆராய்ச்சி அறிஞர்களால் தேர்வு செய்யப்பட்டது. 

    இதில் சிறப்பு விருந்தினராக கொரிய நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் குங்- டே- கிம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மன்னர் ஜவகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்தக் கல்லூரியின் பேராசிரியரான செந்தில்குமார், கவிதா இருவரும் இணைந்து சாட்டிலைட் மூலம், வருமுன் காப்போம் திட்டமாக எரிமலை, பூகம்பம் மற்றும் கடல் சீற்றம் போன்றவற்றை முன்பே அறிவிப்பதற்கான ஒரு அரிய வகை கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

    உதாரணமாக அந்தக் கருவியைக் கொண்டு ஒரு பகுதியில் பூகம்பம் ஏற்படுவதையும் முன்கூட்டி அறிந்து கொள்ளலாம். அதேபோல் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் அந்த கருவி அதை தெரிவிக்கும். அப்போது நாம் போதுமான தண்ணீரை மீண்டும் செலுத்தி பயிரை பாதுகாக்கலாம். 

    கிங்ஸ் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

    இதுபோன்று பல்வேறு வகையில் பயன் அளிக்கும் இந்த கருவியை இக்கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதற்கான காப்பீட்டு உரிமையும் பெற்று உள்ளனர். அதற்காக கல்லூரி  மாணவர்களை அனைவரும் பாராட்டினர். இந்த அரிய கண்டுபிடிப்புக்காக பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

    இறுதியாக நாட்டின் மண்வளம் காக்கவும் மழை வேண்டியும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு விழாவை நிறைவு செய்தனர். மரக்கன்று நடும் விழாவை கொரிய பேராசிரியர் டாக்டர் குங் டே கிம் துவக்கி வைத்தார்.
    Next Story
    ×