என் மலர்
செய்திகள்

திருமணம் நிறுத்தம்
வேலூரில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம்
வேலூரில் இன்று காலை தாலிகட்டும் நேரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு திப்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் மகன் ரவி. இவருக்கும் பலவன் சாத்து குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இரு வீட்டாரும் திருமண பத்திரிக்கை அடித்து உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் கொடுத்தனர்.
இன்று காலை வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது .நேற்று இரவு மணமகன், மணமகள் அழைப்பு போன்ற சடங்குகள் நடந்தன.
இன்று காலையில் திருமணத்திற்காக இருவீட்டாரும் சேண்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு வந்தனர். தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்த புதுமாப்பிள்ளை ரவி திடீரென மாயமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாலி கட்டாமல் சென்ற புதுமாப்பிள்ளை ரவி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். எனக்கு இன்று திருமணம். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் தாலி கட்ட மறுத்து வந்து விட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story