search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிகுண்டை வெடிக்க வைக்க முடிவு
    X
    வெடிகுண்டை வெடிக்க வைக்க முடிவு

    திருப்போரூர் அருகே சிக்கிய ராக்கெட் வெடிகுண்டை வெடிக்க வைக்க முடிவு

    திருப்போரூர் அருகே சிக்கிய ராக்கெட் வெடிகுண்டை செயல் இழக்க வைப்பது ஆபத்து என்பதால் அதனை பாதுகாப்பாக வெடிக்க வைக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குண்டு வெடித்து சிதறியது.

    இதில் அதே பகுதியை சேர்ந்த சூர்யா, மானாமதியை சேர்ந்த திலீபன் (23) ஆகிய 2 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் வெடித்த குண்டு ராணுவத்தில் ராக்கெட் லாஞ்சரில் முன் பகுதியில் பயன்படுத்தும் குண்டு என்பது தெரிய வந்தது. கோவில் அருகே திலீபனின் பிறந்தநாளை நண்பர்கள் கொண்டாடிய போது வெடிகுண்டை இரும்பு பொருள் என்று நினைத்து அவர்கள் உடைத்த போது வெடித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து குண்டு வெடித்த இடம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் மீண்டும் ஒரு வெடிகுண்டு அங்கு சிக்கியது.

    அதனை போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைத்து உள்ளனர். இதுதொடர்பாக அதே பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து இருந்த வியாபாரி ஒருவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிக்கிய வெடிகுண்டை செயல் இழக்க வைப்பது ஆபத்து என்பதால் அதனை பாதுகாப்பாக வெடிக்க வைக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    அதன்படி நேற்று மாலை தமிழக கமாண்டோ படை உதவியுடன் வெடி குண்டு தடுப்பு குழு அதிகாரிகள் மற்றும் போலீசார் வெடிகுண்டை வெடிக்க வைப்பதற்காக மானாமதியில் உள்ள ஏரிக்கு கொண்டு வந்தனர். அப்போது பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

    கோர்ட்டு அனுமதி இன்றி குண்டை வெடிக்க வைக்க முடியாது என்பதால் கடைசி நேரத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டை வெடிக்க வைக்க செங்கல்பட்டு கோர்ட்டில் உத்தரவு பெறப்பட்டது. இன்று கமாண்டோ படை உதவியுடன் வெடிகுண்டை வெடிக்க வைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்குமார் அகர்வால் மேற்பார்வையில் அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.தற்போது அந்த வெடிகுண்டு கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஒரு கல்குவாரியில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.

    அதனை அங்கேயே வெடிக்க வைக்கலாமா? அல்லது ஆறு ஏரி பகுதியில் வைத்து வெடிக்க வைக்கலாமா? என்று ஆலோசித்து வருகின்றனர். இன்று மதியம் அல்லது பிற்பகல் அந்த வெடிகுண்டு வெடிக்க வைத்து செயல் இழக்க செய்யப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×