என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

சேலம் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி

சேலம்:
சேலம் வழியாக சென்னை, பெங்களூரு, திருப்பதி, டெல்லி, மும்பை என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் சேலம் நோக்கி சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தின்னப்பட்டி-கருப்பூர் இடையே வந்த போது தண்ட வாளத்தில் 8 கிலோவுக்கும் மேல் எடை கொண்ட ஒரு பாறாங்கல் இருப்பதை ரெயில் டிரைவர் பார்த்தார்.
உடனே சுதாரித்த ரெயில் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் அருகில் வந்ததால் ரெயிலை நிறுத்த முடியவில்லை. இதனால் பாறாங்கல் மீது ரெயில் அதிவேகமாக மோதியது. இதில் பாறாங்கல் தூள், தூளாக நொறுங்கி சிதறியது. இதனால் ரெயில் எந்த பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
இந்த சம்பவம் குறித்து ரெயில் டிரைவர் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் சம்பவ இடத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பாறாங்கற்கள் தூள், தூளாக நொறுங்கிய நிலையில் கிடந்ததால் அதனையும் ஆய்வு செய்தனர்.
மேலும் தண்டவாளத்தில் கருங்கல்லை வைத்தது யார், அந்த பகுதியில் பகலில் சுற்றி திரிந்தவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காட்டுப்பகுதி என்பதால் அந்த பகுதியில் கேமிரா எதுவும் இல்லை. இதனால் கல் வைத்தவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தண்ட வாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் குறித்து அந்த பகுதியில் விசாரித்து வரும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.