என் மலர்
செய்திகள்

மதுராந்தகம் அருகே சமூக ஆர்வலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா.
சமூக ஆர்வலரான இவர் அந்த பகுதியில் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதன் காரணமாக இவருக்கு ஏற்கனவே மிரட்டல்களும் வந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு ராஜாவின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் ராஜா, மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 பேர் திடீரென ராஜா மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
பாட்டில்கள் விழுந்து வெடித்து சிதறியதில் ராஜாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் புகுந்து அவர் உயிர் தப்பினார்.
இதுபற்றி மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக ராஜா தொடர்ந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை தொடர்ந்து ராஜாவை பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






