என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு - கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
By
மாலை மலர்12 Jun 2019 5:00 AM GMT (Updated: 12 Jun 2019 10:28 AM GMT)

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து கோவையில் 7 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது கொழும்பில் உள்ள கொச்சிகடை அந்தோணியார் ஆலயம், நீர் கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள சீயோன் தேவாலயம் ஆகிய இடங்களில் பிரார்த்தனை நேரத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.
அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமான பேர் பலியானார்கள். இந்த குண்டுவெடித்த நேரத்தில் கொழும்பில் உள்ள 3 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இலங்கை உளவு பிரிவின் விசாரணையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமான கும்பலுடன் சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து இந்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த வாலிபர்களை கண்காணித்து வந்தனர்.
கோவை, கொச்சியில் இருந்து வந்த டி.எஸ்.பி. விக்ரம் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 குழுக்களாக பிரிந்து கோவையில் உள்ள 7 பேர் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து அவர்களது வீடுகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சோதனை நடந்து வரும் வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதேபோல் வெளியில் இருந்து அந்த வீடுகளுக்குள் வரவும் அனுமதிக்கவில்லை.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையில் அசாரூதின், இதயதுல்லா, அபுபக்கர் சித்திக் ஆகியோர் வீடுகள், நிறுவனத்தில இருந்து சில முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். காலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 1 மணியை தாண்டியும் நீடித்தது.

கோவை போத்தனூரை சேர்ந்த சதாம், அக்பர், அக்ரம்ஜிந்தா, உக்கடம் அன்பு நகரை சேர்ந்த அசாரூதின், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக், உக்கடம் அல்அமின் காலனியை சேர்ந்த இதயத்துல்லா, ஷாகிம்ஷா ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நடந்து வருகிறது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து அவர்களது வீடுகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சோதனை நடந்து வரும் வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதேபோல் வெளியில் இருந்து அந்த வீடுகளுக்குள் வரவும் அனுமதிக்கவில்லை.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையில் அசாரூதின், இதயதுல்லா, அபுபக்கர் சித்திக் ஆகியோர் வீடுகள், நிறுவனத்தில இருந்து சில முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். காலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 1 மணியை தாண்டியும் நீடித்தது.
Next Story
×