என் மலர்

  செய்திகள்

  ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் செயல்படும்
  X

  ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் செயல்படும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என்றும் பொதுமக்கள் தவறான செய்தியை கேட்டு பீதி அடைய வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  பெட்ரோல் பங்குகள் நாளை (14-ந்தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் மறுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை என்ற அறிவிப்பு மே 14-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்ற தவறான செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் இந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடவில்லை.

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். பொதுமக்கள் தவறான செய்தியை கேட்டு பீதி அடைய வேண்டாம்.

  இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×