என் மலர்

  செய்திகள்

  சென்னையில் பீர் விற்பனை அதிகரிப்பு
  X

  சென்னையில் பீர் விற்பனை அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் தற்போது கோடை காலமாக இருப்பதால் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ‘கூலிங் பீர்’ விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  சென்னை:

  தமிழ்நாட்டில் ரே‌ஷன் கடைகளை விட மதுக்கடைகளில்தான் அதிக கூட்டம் காணப்படுகிறது. கிராமப்புற சினிமா தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க முண்டியடிப்பது போல் காலை மாலை நேரங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுவதை காண முடிகிறது. அந்த அளவுக்கு மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

  தமிழ்நாட்டில் மொத்தம் 5,236 மதுக்கடைகள் உள்ளன. நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்தக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அங்குள்ள கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு விற்பனை தங்கு தடையின்றி நடந்து வருகிறது.

  டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, விற்பனை நம்பர்-1 இடத்திலும் பீர் விற்பனை 2-வது இடத்திலும் உள்ளது.

  தினமும் ரூ.85 கோடி முதல் 90 கோடிவரை பிராந்தி விற்பனை நடைபெறுகிறது. பீர் விற்பனை ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை உள்ளது.

  தற்போது கோடை காலமாக இருப்பதால் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ‘கூலிங் பீர்’ விற்பனை சென்னையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

  வழக்கத்தைவிட ரூ.10 கோடிக்கு பீர் விற்பனை அதிகமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  தட்டுப்பாடு இல்லாமல் பிராந்தி- பீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் 12 மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுவகைகள் வரவழைக்கப்பட்டு ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு அனுப்பி வருவதாகவும் தெரிவித்தனர்.

  கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ‘கூலிங் பீர்’ கேட்பதாகவும் ‘கூலிங்’ இல்லாவிட்டால் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்வதாகவும் ஆதங்கத்துடன் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
  Next Story
  ×