என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

நடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி

உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள கோம்பை அமுல்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பழனியம்மாள் (40).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனியம்மாளும், அவரது தாய் முத்தம்மாள் (60) என்பவரும் தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். நேற்று இரவு பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளை மணிகண்டன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.
இது குறித்து கோம்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கொலை செய்யப்பட்ட பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளின் உடல்களை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் எனது மனைவியை உறவுக்கு அழைக்கும் போதெல்லாம் மறுத்து வந்தார். இதனால் அவருடன் நான் அடிக்கடி தகராறு செய்தேன். அப்போது என் மனைவியும், மாமியாரும் சேர்ந்து என்னை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவார்கள்.
என் மனைவி வேலை செய்யும் தோட்டத்தில் அவரை பார்க்க சென்ற போது அவர் அங்குள்ள வேறு ஒருவரிடம் சிரித்து பேசி பழகிக் கொண்டு இருந்தார். இதனால் வீட்டுக்கு வந்த என் மனைவியிடம் என்னுடன் இருக்க உனக்கு பிடிக்கவில்லையா? தோட்டத்தில் வேலை பார்க்கும் வேறு ஒருவருடன் சிரித்து பேசுகிறாய்? அவனுடன் உனக்கு தொடர்பு உள்ளதா? என சத்தம் போட்டேன். நேற்று இரவும் இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு வந்தது. பின்னர் என் மனைவி தூங்கச் சென்று விட்டார். ஆனால் ஆத்திரம் அடங்காமல் இருந்த நான் என் மனைவியை வெட்டிக் கொன்றேன். சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டு இருந்த என் மாமியார் எழுந்து அதை தடுத்தார். அவரையும் வெட்டி கொன்றேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
