என் மலர்
செய்திகள்

கடந்த தேர்தலை விட மதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைவு
மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலை விட 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்தது. #LokSabhaElections2019
மதுரை:
17-வது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. மதுரையில் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை இருந்ததால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான நேரத்தை இரவு 8 மணி வரை நீடிப்பதாக அறிவித்தது.
மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மேலும் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகள் தேனி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டவை ஆகும்.
வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மதுரை புறநகர் பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் தேரோட்டம் நடைபெற்ற மாசி வீதிகள் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது.
மாலை 6 மணி அளவில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு 63 சதவீதமாக இருந்தது. இரவு 8 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும் பதிவான வாக்குகள் 65.83 சதவீதமாக இருந்தது.
அதாவது நீட்டிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2.83 சதவீத வாக்குகளே அதிகரித்து இருந்தது. கடந்த (2014) பாராளுமன்ற தேர்தலின்போது மதுரை பாராளுமன்ற தொகுதியில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
அதனை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 2 சதவீத வாக்குகள் குறைவாகவே பதிவாகி உள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் 77.47 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவு ஆகும். தேர்தல் வாக்குப் பதிவு குறித்து கலெக்டர் நடராஜன் கூறும்போது, கடந்த தேர்தலை விட 2 சதவீதம் குறைந்துள்ளது உண்மைதான்.
இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. திருவிழா, தேர்தல் என 2 முக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் 70 சதவீதமும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 72 சதவீதமும், ராமநாதபுரத்தில் 68.21 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. #LokSabhaElections2019

Next Story