என் மலர்
செய்திகள்

திருநாவுக்கரசு.
திருநாவுக்கரசு ஜாமின் மனு தள்ளுபடி- கோர்ட்டு வளாகத்தில் தாய் வாக்குவாதம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் தாய் கோர்ட்டு வளாகத்தில் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #PollachiAbuseCase #PollachiAssaultCase
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் மாணவிகள் - பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு ஆவார்.
அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை ஜாமினில் விடுதலை செய்ய கோரி திருநாவுக்கரசின் தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் லதா நேரடியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
திருநாவுக்கரசை வெளியில் விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால் திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க முடியாது என நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார்.
ஜாமின் மனு விசாரணைக்கு வந்தததை தொடர்ந்து திருநாவுக்கரசின் தாய் லதா கோர்ட்டுக்கு வந்து இருந்தார். அவர் கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் உங்கள் மகன் இப்படி செய்து விட்டாரே? என திருநாவுக்கரசு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த லதா, எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை. அவனது செல்போனில் எத்தனை பெண்கள் படம் உள்ளதோ? அந்த பெண்களை பிடித்து விசாரணை செய்யுங்கள். என் மகன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர் என்றார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen

Next Story