என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சென்னையில் போலி கால் சென்டர்- மேலும் 3 பேர் கைது
Byமாலை மலர்28 Feb 2019 5:34 AM GMT (Updated: 28 Feb 2019 7:18 AM GMT)
சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி வந்த தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #ChennaiFakeBPO
சென்னை:
சென்னையில் உமாபதி(40), சீதா(38), சதிஷ்(35) ஆகியோர் போலியாக கால் சென்டர் ஒன்றை இயக்கி வந்துள்ளனர். இதில் 70 பெண்கள் உட்பட 125 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களிடமிருந்து பான் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பெற்றுக் கொண்டு, அனைவருக்கும் 5 லட்சம் வங்கியில் மிகக்குறைந்த வட்டிக்கு லோன் வாங்கித்தருவதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பி அனைத்து ஊழியர்களும் வங்கி கணக்குகள் மற்றும் ரகசிய எண்ணை கொடுத்துள்ளனர். இதன் மூலம் ரூ.2 கோடி அளவில் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து திருடியுள்ளனர்.
இந்த மோசடியில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 20ம் தேதி வெங்கடேஷ், விக்னேஷ், கிருஷ்ண குமார், சார்லஸ், திராவிட அரசன், பூபதி எனும் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதன்மூலம் முக்கிய குற்றவாளியான ஜான்சன்(35) கைது செய்யப்பட்டான். தற்போது மேலும் 3 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதானவர்களிடம் இருந்து 6 சொகுசு கார்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த கார்களில் வழக்கறிஞர் , பத்திரிக்கையாளர் என எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #ChennaiFakeBPO

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், போலியாக ஆவணங்கள் தயாரித்தது மற்றும் சட்டத்திற்கு புறம்பான வகையில் உதவி செய்ததாக கூறியுள்ளனர். இதன்மூலம் அல்ட்ரா டிரன்ஸ் எண்டர்பிரைசஸ், கிரிஷ் கன்சல்டன்ஸி, ட்ரைபெக் அசோசியேட்ஸ், டெக் ப்ரோசஸ், பார்டியூன் எண்டர்பிரைசஸ் எனும் பெயர்களில் போலி கம்பெனிகள் நிறுவி வந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைதானவர்களிடம் இருந்து 6 சொகுசு கார்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த கார்களில் வழக்கறிஞர் , பத்திரிக்கையாளர் என எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #ChennaiFakeBPO
Next Story
×