search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்துக்கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டபோது எடுத்தபடம்.
    X
    அனைத்துக்கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டபோது எடுத்தபடம்.

    குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் 14 லட்சத்து 77ஆயிரம் வாக்காளர்கள்

    தமிழகம் முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. குமரியில் மொத்த வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் விபரங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டார். #Finalvoterslist
    நாகர்கோவில்:

    தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்த நிலையில் இன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    இத்தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் விபரங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே இன்று வெளியிட்டார்.

    அதன்படி குமரி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 77 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 45 ஆயிரத்து 626.

    பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 387. இதர வாக்காளர்கள் 148.

    குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் கன்னியாகுமரி தொகுதியிலேயே அதிக வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 2 லட்சத்து 75 ஆயிரத்து 508 பேர் உள்ளனர்.

    பத்மநாபபுரம் தொகுதியில் குறைந்த பட்சமாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 964 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியிலில் 37 ஆயிரத்து 731 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 17 ஆயிரத்து 382 பேர். பெண்கள் 20 ஆயிரத்து 344.

    நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 7,671 பேர். ஆண் வாக்காளர்கள் 3,903 பேரும், பெண் வாக்காளர்கள் 3,763 பேரும் இதர வாக்காளர்கள் 5 பேரும் நீக்கப்பட்டு உள்ளனர்.

    புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

    1-1-2019-ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். அதற்கு அவர்கள் 1950 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறியலாம்.

    மேலும் இந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு நபரும் விடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, சப்- கலெக்டர்கள் பவன்குமார் கிரியப்பனார், சந்தியா அரி மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவர்களுடன் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சந்துரு, தி.மு.க. சார்பில் வக்கீல் லீனஸ், காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அமுதன் உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் ஆண், பெண் மற்றும் இதரர் குறித்த வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

    தொகுதி                   ஆண்    பெண்   இதர   மொத்தம்

    கன்னியாகுமரி     138236   137206    66        275508

    நாகர்கோவில்        124264   125651    13        249928

    குளச்சல்           129265 122131 14   251410

    பத்மநாபபுரம்      114687     109257      20       223964

    விளவங்கோடு      118003        121164    20     239187

    கிள்ளியூர்                 121171        115978    15    237164

    மொத்தம்                   745626        731387  148  1477161

    Next Story
    ×