என் மலர்

  செய்திகள்

  கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு
  X

  கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டிஜிட்டல் மெமோகிராம் நவீன மருத்துவ கருவி மூலம் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #KilpaukGovtHospital
  சென்னை:

  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிஜிட்டல் மெமோகிராம் நவீன மருத்துவ கருவி பொருத்தப்பட்டன.

  பெண்களுக்கு மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் இந்த மருத்துவ கருவி 3-டி தொழில்நுட்பம் கொண்டது. ஜூன் மாதம் முதல் தற்போது வரை நவீன கருவி மூலம் 1868 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

  இதில் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் வசந்தாமணி கூறியதாவது:-

  சராசரியாக மாதம் 10 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது. ஜூன் மாதம் முதல் தற்போது வரை நவீன கருவி மூலம் பரிசோதனை செய்ததில் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

  மேலும் 66 பேருக்கு மார்பக புற்றுநோய்க்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது. பரிசோதனையில் மார்பக புற்றுநோய் இல்லை என்றால் 15 நிமிடத்தில் பரிசோதனை முடிவு கிடைத்துவிடும். ஒருவேளை புற்றுநோய் இருந்தால் அதை உறுதி செய்ய 1 அல்லது 2 நாட்கள் ஆகும்.

  மேலும் ஆஸ்பத்திரியில் மார்பக புற்று நோய் கிளினிக்கும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வசதிகள் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே மார்பக புற்றுநோய் கண்டு பிடிக்கப்படுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மெமோகிராம் நவீன மருத்துவ கருவி மூலம் 4 மி.மீ. அளவில் உள்ள புற்றுநோய் சிதைவைக்கூட துல்லியமாக கண்டறிய முடியும். அதன்மூலம் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் சிதைவை அப்புறப்படுத்த முடியும். #KilpaukGovtHospital
  Next Story
  ×