search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை குடிநீர் தேவைக்கு விவசாய கிணற்று தண்ணீர் - தினமும் 12 கோடி லிட்டர் எடுக்கப்படுகிறது
    X

    சென்னை குடிநீர் தேவைக்கு விவசாய கிணற்று தண்ணீர் - தினமும் 12 கோடி லிட்டர் எடுக்கப்படுகிறது

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து தினமும் 8 கோடி முதல் 12 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன.

    கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்யாததால் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் 353 மி.மீட்டர் மழை மட்டுமே பெய்தது. இது வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 55 சதவீதம் குறைவு ஆகும்.

    ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சென்னையில் வினியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    இதனால் இப்போதே சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்கி உள்ளது.

    குடிநீர் தேவையை சமாளிக்க மாற்று ஏற்பாடுக்கு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். தற்போது சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 20 கோடி லிட்டர், வீராணம் திட்டத்தில் இருந்து 18 கோடி லிட்டர், ஏரிகளில் இருந்து 27 கோடி லிட்டர் என மொத்தம் 65 கோடி லிட்டர் பெறப்பட்டு வருகிறது.

    ஏரிகளில் தண்ணீர் தீர்ந்து விடும் நிலையில் இருப்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து தினமும் 8 கோடி முதல் 12 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும் போது, ‘சென்னை குடிநீர் தேவைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்காக விருப்பம் உள்ள விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    மேலும் தேவைக்கு ஏற்ப சிக்கராயபுரம் கல்குவாரி, போரூர், கொளத்தூர், ரெட்டேரி ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கவும் பணிகள் நடக்கிறது’ என்றார்.

    Next Story
    ×