search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் - பெண் வாக்காளர்களே அதிகம்
    X

    திருவாரூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் - பெண் வாக்காளர்களே அதிகம்

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம். #ThiruvarurByElections
    திருவாரூர்:

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி காலமானார். இதனை தொடர்ந்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 28-ந் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 169 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 3 ஆயிரத்து 669 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திருவாரூர், கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகள் உள்ளன. கொரடாச்சேரி பேரூராட்சி மற்றும் மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட ஒன்றியங்களை சேர்ந்த பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. #ThiruvarurByElections

    Next Story
    ×