என் மலர்

  செய்திகள்

  கைதான ரேசன் கடை ஊழியர் ராஜ்குமார்.
  X
  கைதான ரேசன் கடை ஊழியர் ராஜ்குமார்.

  ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா வியாபாரியை வெட்டி கொன்ற ரேசன் கடை ஊழியர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா வியாபாரியை வெட்டிக் கொன்ற ரேசன் கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
  ஆண்டிப்பட்டி:

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் லோகு (வயது 45). இவர் அந்த பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (31) கஞ்சா வாங்கி விற்பனை செய்து வந்தார்.

  ராஜ்குமார் அந்த பகுதியில் உள்ள ரேசன் கடையில் தினக்கூலி பணியாளராக உள்ளார். சம்பவத்தன்று லோகு கஞ்சா சப்ளை செய்ததற்குரிய பணத்தை ராஜ்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது முழு பணத்தையும் கொடுக்காமல் ராஜ்குமார் ஏமாற்றியதால் லோகு இதனை தட்டிக் கேட்டார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  ஆத்திரமடைந்த ராஜ்குமார் அரிவாளால் லோகுவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்த ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

  இது குறித்து கடமலைக்குண்டுபோலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை தேடி வந்தனர். இதனிடையே உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×