என் மலர்
செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 நாளாக 100 அடியாக நீடிப்பு
7 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MetturDam
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவ மழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி 100 அடியை எட்டியது.
அதே மாதம் 23-ந்தேதி அணையின் உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
பின்னர் பானசத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மழை சற்று குறைந்ததாலும் கடந்த 5-ந்தேதி நீர்மட்டம் 101.79 அடியாக சரிந்தது.
இதற்கிடையே மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கடந்த 19-ந் தேதி மேட்டூர் அணைக்கு 24 ஆயிரத்து 764 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர ஆரம்பித்தது.
நேற்று 104.89 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 104.37 அடியாக சரிந்தது. நேற்று 9 ஆயிரத்து 35 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 5 ஆயிரத்து 783 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 13 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விட அணைக்கு வரும் நீர்வரத்து குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
இருந்தாலும் 100 நாளை தாண்டியும் மேட்டூர் அணை நீர்மட்டம் இந்த ஆண்டு 100 அடிக்கு மேல் நீடிக்கிறது.
கடந்த 2011-ம் ஆண்டு 178 நாட்கள் 100 அடிக்கு மேல் நீர்மட்டம் நீடித்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீர்மட்டம் 100 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MetturDam

Next Story