என் மலர்

  செய்திகள்

  குறும்பு செய்த குழந்தைகளை சைக்கோ போல் துன்புறுத்திய கொலைகாரி அபிராமி
  X

  குறும்பு செய்த குழந்தைகளை சைக்கோ போல் துன்புறுத்திய கொலைகாரி அபிராமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீடியோகாலில் கள்ளக்காதலனுடன் நீண்ட நேர உரையாடிய கொலைகாரி அபிராமி, குறும்பு செய்த குழந்தைகளை சைக்கோ போல் துன்புறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KundrathurAbirami
  சென்னை:

  குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் விஜயின் மனைவி அபிராமி (25). தனது 2 குழந்தைகளை பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த குற்றத்துக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

  அவருடன் கள்ளக்காதலன் சுந்தரம் (28) என்பவரும் கைதாகியுள்ளார். இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  கள்ளக்காதலுக்காக ஒரு பெண் தனது 2 குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரக்கமுள்ள தாய் என்றால் பெற்ற குழந்தைகளை கொலை செய்ய மனம் வராது. ஆனால் அபிராமி தனது 2 குழந்தைகள் மீது வெறுப்புடன் இருந்ததால் தான் கொலை செய்யும் அளவுக்கு துணிந்து இருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டு அபிராமியின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்தனர்.

  அப்போது அபிராமி செல்போனுக்கு அடிமையானவர் என தெரியவந்தது. எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பார். படித்த முகவசீகரமான அபிராமி தன்னைத்தானே செல்போனில் படம் பிடித்து அழகுபார்ப்பார். ‘டப்ஸ் மாஸ்’ என்ற செயலி (ஆப்) செல்போனில் பிரபலமாகி வருகிறது.

  அதில் சினிமா வசனங்களுக்கு ஏற்பவும், பாடல்களுக்கு ஏற்பவும் நாம் பேசுவது, பாடுவது போல் பாவனை செய்து கொள்ளலாம். இன்றைய இளம் தலைமுறையினர் ‘டப்ஸ் மாஸ்’ பாவனையை மிகவும் ரசிப்பதுடன் அதை மற்றவர்களுக்கும் அனுப்பி மகிழ்கிறார்கள்.

  அபிராமியின் செல்போனை போலீசார் ஆராய்ந்த போது அவர் ‘டப்ஸ்மாஸ்’ அடிமை என தெரியவந்தது. அவர் தனது கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசி இருக்கிறார். அதில் ஒரு பகுதியை ‘டப்ஸ்மாஸ்’ ஆக மாற்றி தனது செல்போனில் சேமித்து வைத்து இருக்கிறார்.

  இதே போல் குழந்தைகளையும் பேச வைத்து இருக்கிறாள். இதில் குழந்தைகளும் அடிமைகளாகி தாய் பேசும் போது அவர்களும் குறுக்கே புகுந்து இடையூறு செய்து இருக்கிறார்கள்.

  இதனால் எரிச்சல் அடைந்து அபிராமி தனது குழந்தைகளை சத்தம் போட்டு மிரட்டுவாள். பல சமயம் பக்கத்து வீடுகளுக்கு கேட்கும் அளவுக்கு அவள் குழந்தைகளை சைக்கோ போல் கோபத்தின் எல்லைக்கே சென்று அடித்து அழ வைத்திருக்கிறார்.

  குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் அபிராமிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

  இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, அபிராமி தனது காதலனுடன் வீடியோகால் மூலம் அடிக்கடி பேசியிருக்கிறார். அதை அவர் தனது செல்போனில் பதிவு செய்தும் வைத்து இருக்கிறார். கணவர் வேலைக்கு சென்றபின் அவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பது தெரிய வந்தது.

  அவர் கள்ளக்காதலனுடன் வீடியோவில் பேசும் போது, குழந்தைகள் குறுக்கிட்டால் அவர்களை கடுமையாக தாக்குவாள். அந்த அளவுக்கு கள்ளக்காதல் அவரை மாற்றி இருக்கிறது. ஒருமுறை குழந்தைகளை அவர் அடிப்பது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசிலும் புகார் செய்து இருக்கிறார்கள்.

  எப்போதும் தன்னைப் பிரபலப்படுத்திக் காட்ட நினைக்கும் அபிராமி தனது 2 குழந்தைகளை கொன்று அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இதுவும் ஒருவகையான சைக்கோத்தனம் தான் என்று தெரிவித்தனர். #KundrathurAbirami
  Next Story
  ×