என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ குட்கா பறிமுதல் - வடமாநில வாலிபர் கைது
  X

  திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ குட்கா பறிமுதல் - வடமாநில வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் போலீஸ் நிலையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.#GutkhaScam #GutkhaCBIProbe

  திருவள்ளூர்:

  திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு தகவல் கிடைத்தது.

  அவரது உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் காந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

  அப்போது வீட்டில் 500 கிலோ குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கிருந்த ராஜஸ்தான் மாநில வாலிபர் விக்ரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

  அவருக்கு குட்கா கிடைத்தது எப்படி? அவருடன் தொடர்புடையவர்கள் யார்? வேறு எங்கேனும் குட்காவை பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்து தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×