search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஏன்?- டாக்டர் கிருஷ்ணசாமி விளக்கம்
    X

    நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஏன்?- டாக்டர் கிருஷ்ணசாமி விளக்கம்

    ஓய்வுக்குப் பின் இடம் தேவை என்பதால் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். #DrKrishnasamy

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் புதிய தமிழம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில் 2 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்ற செலவு.

    மேலும் அந்த பகுதியில் நடைபெறும் அரசு வேலை திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும். எனவே தேர்தல் ஆணையம் 2019-ல் நடைபெறும் பொதுத் தேர்தலோடு இதனையும் நடத்தலாம்.

    தேவேந்திரகுல வேளாள மக்கள் பண்டைய காலத்திலிருந்து இலக்கியங்களில மேகுத நில மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    திராவிட இயக்கங்கள் 70 ஆண்டுகள் மோசடி செய்து அவர்களை பின்தங்கிய சமூகமாக மாற்றியுள்ளது.

    இட ஒதுக்கீடு இல்லாமல் தங்களது திறமையால் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளில் முன்னேறி வந்துள்ளனர்.

    தேவேந்திரகுல வேளாளர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்.

    திருமாவளவன் 2003-04ல் குறிப்பாக ஜெயலலிதா மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்தபோது தனது பெயரை மாற்றி வெளிநாட்டு தொடர்பில் உள்ளார்.

    அவருக்கு வழங்கப்பட உள்ள முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். இதுகுறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர், மற்றும் பேராசிரியரிடம் ஆய்வறிக்கை குறித்து புகார் அளித்துள்ளோம். இதனை மீறி முனைவர் பட்டம் வழங்கினால் நீதிமன்றம் செல்வோம்.

    நடிகர்கள் ஓய்வுக்குப்பின் மற்றொரு இடம் தேவை என்பதால் அரசியலுக்கு வருகிறார்கள்.

    இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். #DrKrishnasamy

    Next Story
    ×