search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி கருப்புபேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
    X
    தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி கருப்புபேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

    விருத்தாசலம் அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளியில் தலைமை ஆசிரியர் உண்ணாவிரதம்

    விருத்தாசலம் அருகே ஊதிய உயர்வு வழங்க கோரி பள்ளியில் தலைமை ஆசிரியர் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பாலை கொல்லை புதுப்பேட்டையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் சுற்றுபகுதியை சேர்ந்த 150 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நிர்வாகியாக வெள்ளையன் உள்ளார். இவரது மகன் கிருஷ்ணசாமி (வயது 41) தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இந்த பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    பள்ளியின் நிர்வாகி வெள்ளையனுக்கும் வட்டார கல்வி அலுவலருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக வட்டார கல்வி அலுவலர் கடந்த 1.4.2018 முதல் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமிக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. மேலும் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவ- மாணவிகளுக்கு சீருடை மற்றும் முதல் பருவ பாட புத்தகங்களும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்தும், தனக்கு ஊதிய உயர்வு வழங்க கோரியும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி இன்று பள்ளியில் உள்ள தனது அறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். மேலும் அவர் தனது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தார்.

    தலைமை ஆசிரியர் கருப்புபேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×