என் மலர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது
Byமாலை மலர்27 Aug 2018 9:56 AM IST (Updated: 27 Aug 2018 9:56 AM IST)
கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து இன்று காலை 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 26,590 கன அடியும், கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.
தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணைக்கு செல்கிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக இருந்தது.
நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து அதிகரித்து 34 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலையில் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இன்று காலை இந்த நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கொட்டுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது.
இன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், வழக்கமான பாதை வழியாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. ஆனால் கோத்திக்கல் பாறையில் இருந்து மணல்திட்டு வரை இன்று 3-வது நாளாக பரிசல் இயக்கப்பட்டு வருகிறது.
முதலைப்பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். #Hogenakkal #Cauvery

Next Story
×
X