என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 6 ஆயிரம் வேன்கள் - ஆட்டோக்கள் ஓடவில்லை
    X

    குமரி மாவட்டத்தில் 6 ஆயிரம் வேன்கள் - ஆட்டோக்கள் ஓடவில்லை

    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குமரி மாவட்டத்தில் 6 ஆயிரம் வேன்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
    நாகர்கோவில்:

    மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

    இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மோட்டார் தொழிலில் தொடர்புடைய அனைத்து சங்க கூட்டமைப்புகளும் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி, சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி. தொ.மு.ச. அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கம், ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    குமரி மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேன்கள், 4 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகிறது. இதில் பெரும்பாலான வேன்கள், ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.

    ஆட்டோக்கள் ஓடாததால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுபோல இன்று காலை ரெயில், பஸ்களில் வந்து இறங்கியவர்களும் வீடுகளுக்கு செல்ல ஆட்டோ கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள், வாடகை வேன்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான வேன்கள் இன்று கேரளா செல்லவில்லை. இதுபோல கேரளா செல்லும் அரசு பஸ்களும் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள், அலுவலக ஊழியர்கள் அவதிப்பட்டனர்.

    இன்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து மோட்டார் தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர். இவர்களுடன் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப்புகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டன.

    குமரி மாவட்டத்திலும் பெரும்பாலான ஒர்க்ஷாப்புக்கள் மூடிக்கிடந்தது. உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்படவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
    Next Story
    ×