என் மலர்

  செய்திகள்

  சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய நாய்கள் கண்காட்சி
  X

  சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய நாய்கள் கண்காட்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் நேற்று நடந்த அகில இந்திய நாய்கள் கண்காட்சியில் 30 வகையான நாய்கள் பங்கேற்றன.
  சேலம்:

  தி சேலம் அக்மெ கென்னல் கிளப் சார்பில் சேலம் கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சிக்கு பொமரேனியன், டேஸ்ஹவுண்ட், பீகிள், ராட்வீலர், டால்மேசன், கிரேட்டன், டாபர்மேன், மினியேச்சர் பின்சர், காக்கர் ஸ்பேனியல், புல்டாக், ஐரிஸ்டிடம், பூடுல், செயின்ட் பெர்னார்ட், சலூகி, பூடுல், ராஜபாளையம் நாய், ரொடிஸியன் ரிட்ஜ்பெக், புல்டெரியா உள்பட 30 வகையான சுமார் 300 நாய்கள் அழைத்து வரப்பட்டன.  கோலாப்பூர், மராட்டியம், பெங்களூரு, கேரளா, சென் னை, பஞ்சாப், போபால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நாய்கள் கலந்து கொண்டன. நடுவர்களாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பீட்டர் கட்லர், கேமாக் மற்றும் சென்னையை சேர்ந்த சுதர்சனன் இடம் பெற்றனர்.

  இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாய் இனங்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், உடல் எடை, அழகு, கீழ்படிதல், திறமையை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாய்கள் முதல் 3 இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டன.

  போட்டியில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு சுழற்கோப்பை, கேடயம் என பரிசுகள் வழங்கப்பட்டன.

  கண்காட்சியில் நாய்களுக்கு தேவையான உணவு பொருட்கள், உபகரணங்கள் வாங்க ஸ்டால்களும், பொதுமக்களுக்கு தேவையான உணவு வகை ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் கிளப் செயலாளர் நடராஜன், உதவி செயலாளர் சாந்தமூர்த்தி, பொருளாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
  Next Story
  ×