search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலமரத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்.
    X
    ஆலமரத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்.

    300 ஆண்டுகள் பழமையான ஆலமரத்துக்கு இறுதி சடங்கு நடத்திய கோவை மக்கள்

    கோவை தொண்டாமுத்தூரில் சூறாவளிக்காற்றில் 300 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்ததால் அம்மரத்திற்கு பொதுமக்கள் இறுதி சடங்கு நடத்தினர்.
    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் இக்கரைபோளுவாம்பட்டி செல்லும் வழியில் உள்ளது புத்தூர். இங்கு 300 வருட பழமையான ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் பஸ் நிறுத்தம், கடை, மேடை உள்ளது. இதனை அங்குள்ள பொதுமக்கள் ஊரின் நினைவு சின்னமாக கூறி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. பலத்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கடந்த ஞாயிறு இரவு 7 மணிக்கு ஆலமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஊர்ப்பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து விழுந்து கிடந்த மரத்தை பார்த்து கதறி அழுதனர். மரத்தை வெட்டி அகற்ற 2 நாட்கள் ஆனது.

    300 ஆண்டுகளாக தங்களோடு தங்கள் மூதாதையர்களோடும் வாழ்ந்த மரத்திற்கு இறுதி சடங்கு நடத்தினர். கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அந்த பகுதி முழுவதும் ஒட்டினர். வெளியூரில் இருந்து வந்தவர்கள் இதனை பார்த்து நெகிழ்ந்தனர்.
    Next Story
    ×