என் மலர்
செய்திகள்

கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு- அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்
புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் 620 மாணவர்கள் எம்.பி. பி.எஸ். படித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் தனித்தனியாக கல்வி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதில் 4 ஆண்டுகள் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளும் பங்கேற்றனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வாசலில் கூடினார்கள்.
அங்கு தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி கட்டணத்தை உடனே குறைக்க வேண்டும் என கூறி கோஷம் எழுப்பினார்கள்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ் அழைப்பு விடுத்தார். ஆனால், பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews

Next Story