என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் தனபால் மரணமடைந்த முத்துசாமி மனைவி ஜெயலட்சுமி போட்டோவுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
    X
    சபாநாயகர் தனபால் மரணமடைந்த முத்துசாமி மனைவி ஜெயலட்சுமி போட்டோவுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி மனைவி மறைவு- சபாநாயகர் தனபால் நேரில் ஆறுதல்

    ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி மனைவி மறைவுக்கு சபாநாயகர் தனபால் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
    ஈரோடு:

    முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருப்பவர் முத்துசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி சமீபத்தில் மரணமடைந்தார்.

    இதையொட்டி முத்துசாமிக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேரில் வந்து அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று ஈரோடு வந்த தமிழக சபாநாயகர் தனபால் நேராக ஈரோடு பெரியார் நகரில் உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர் முத்துசாமி வீட்டுக்கு சென்றார்.

    அங்கு அவரை வீட்டிலிருந்த முத்துசாமி வரவேற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் மனைவி இறந்ததையொட்டி ஆறுதல் கூறினார். மேலும் இருவரும் 30 நிமிடம் தனியாக அமர்ந்து பேசி கொண்டனர். அதன் பிறகு வெளியே வந்த தனபாலிடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர். அதற்கு சபாநாயகர், “ நான் இங்கு நண்பர் முத்துசாமி மனைவி மறைவு குறித்து ஆறுதல் கூற வந்தேன். அவரை சந்தித்து ஆறுதலும் கூறினேன். வேறொன்றும் சொல்வதிற்கில்லை” என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    இந்த சந்திப்பின்போது எதிரும் புதிருமாக உள்ள அ.தி.மு.க-தி.மு.க பிரமுகர்களும் சந்தித்து பரஸ்பரம் நட்பை பரிமாறிக் கொண்டனர்.

    இதை பார்த்தவர்கள் மத்தியில் வியப்பாக இருந்தது. #Tamilnews
    Next Story
    ×