search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோந்து சென்றபோது கடலில் தவறி விழுந்து இறந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியது
    X

    ரோந்து சென்றபோது கடலில் தவறி விழுந்து இறந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியது

    ரோந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்து இறந்த சென்னையை சேர்ந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியது.
    ராமேசுவரம்:

    இந்திய கடற்படைக்கு சொந்தமான கார்நிக்கோபர் கப்பல் சென்னை முதல் ராமேசுவரம் வரை உள்ள கடற்பகுதியில் ரோந்து சென்று வருவது வழக்கம். இந்த கப்பலில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

    கடந்த 6-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கும், ஜெகதாபட்டிணத்துக்கும் இடையே உள்ள கடலில் கடற்படை வீரர்கள் ரோந்து சென்றனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த கடற்படை வீரர் ஜாய் பிரசாத் (வயது 27) என்பவர் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வீரர்கள் கடலில் குதித்து அவரை தேடினர். பலன் இல்லை.

    இதையடுத்து கடலோர காவல் படையினர், அப்பகுதி மீனவர்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தொண்டி கடற்கரையில் ஜாய் பிரசாத்தின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் தொண்டி போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    Next Story
    ×