என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் படிப்படியாக போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்-  முதன்மை செயலர் பேட்டி
    X

    தூத்துக்குடியில் படிப்படியாக போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்- முதன்மை செயலர் பேட்டி

    தூத்துக்குடியில் மக்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் படிப்படியாக போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று வேளாண்மை துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வேளாண்மை துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. நேற்று வரை பஸ்கள் ஓடாமல் இருந்தது. இன்று பஸ்கள் இயங்கத்தொடங்கியுள்ளன. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் இன்று மாலைக்குள் முழுமையான அளவு பஸ்கள் இயக்கப்படும்.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் தூத்துக்குடியில் படிப்படியாக போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring #SterliteProtest
    Next Story
    ×