என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட குட்கா ஆலை மேலாளர் ரகுராமன்.
குட்கா ஆலை மேலாளரிடம் அதிரடி விசாரணை
By
மாலை மலர்5 May 2018 4:05 AM GMT (Updated: 5 May 2018 4:05 AM GMT)

கோவை குட்கா ஆலை மேலாளரை 3 நாள் காவலுக்கு எடுத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர்:
கோவை அருகே உள்ள கண்ணம்பாளைத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட குட்கா ஆலை கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆலை மேலாளர் ரகுராமன் மற்றும் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஆலை மேலாளர் ரகுராமனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சூலூர் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
மனுவை விசாரித்த சூலூர் கோர்ட்டு நீதிபதி வேடியப்பன் குட்கா ஆலை மேலாளர் ரகுராமனை 3 நாள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதனை தொடர்ந்து ரகுராமனை போலீசார் அழைத்து சென்றனர். அவரை சூலூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது ரகுராமனிடம் எத்தனை ஆண்டுகளாக குட்கா ஆலை செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து எந்த பகுதிகளுக்கு குட்கா சப்ளை செய்யப்பட்டது? இதில் முக்கிய புள்ளிகள் யாருக்கேனும் தொடர்பு உண்டா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அப்போது சில தகவல்களை குட்கா ஆலை மேலாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார். அதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நாளை மறுநாள் (7-ந்தேதி) வரை ரகுராமனிடம் விசாரணை நடத்துகிறார்கள். அன்று மாலை 5 மணிக்கு சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
இதற்கிடையே குட்கா கம்பெனி உரிமையாளர் அமித்ஜெயினை தனிப்படை போலீசார் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவரை கைது செய்தால்தான் யார்? யாருக்கு தொடர்பு? என்ற முழுவிவரம் தெரியவரும்.

Next Story
×