என் மலர்
செய்திகள்

ஆண்டிப்பட்டி கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுக்களை தூக்கிச்சென்ற கும்பல்
ஆண்டிப்பட்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனுக்களை மர்மகும்பல் தூக்கிசென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #CooperativeSocietieselection
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதற்கான பரிசீலனை தற்போது நடைபெற்று வருகிறது.
தேர்தல் அலுவலர் முருகன் வெள்ளைக்காமு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மர்மகும்பல் திடீரென்று உள்ளே புகுந்தது. அங்கிருந்த அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு வேட்புமனுக்களை அங்கிருந்து தூக்கிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் அலுவலர் தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைத்தார்.
இதுகுறித்து கண்டமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #CooperativeSocietieselection
Next Story