என் மலர்

  செய்திகள்

  காஞ்சீபுரத்தில் நாளை வணிகர் சங்க பேரவை மாநாட்டில் 10 லட்சம் வியாபாரிகள் பங்கேற்பு - வெள்ளையன் தகவல்
  X

  காஞ்சீபுரத்தில் நாளை வணிகர் சங்க பேரவை மாநாட்டில் 10 லட்சம் வியாபாரிகள் பங்கேற்பு - வெள்ளையன் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஞ்சீபுரத்தில், நாளை நடைபெறும் வணிகர் சங்க பேரவை மாநாட்டில் 10 லட்சம் வியாபாரிகள் பங்கேற்பார்கள் என மாநில தலைவர் த.வெள்ளையன் கூறினார்.

  சென்னை:

  தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந் தேதி வணிகர் தினவிழா கொண்டாடப்படுகிறது.

  35-வது வணிகர் தினவிழா வணிகம், விவசாயம் மற்றும் சுயதொழில்கள் மீட்பு மாநாடு காஞ்சீபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி வளாகம் வெள்ளகேட் அருகில் நாளை (5-ந் தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை வகிக்கிறார். பொதுச் செயலாளர் கே.தேவராஜ் வர வேற்புரையாற்றுகிறார்.

  மாநாட்டில், அகில இந்திய வர்த்தக சங்க தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ராம், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, வர்த்தக சங்க பொதுச் செயலாளர் விஜய் பிரகாஷ் ஜெயின், உலக தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன், பொதுவுடமை இயக்க தலைவர் இரா.நல்லக்கண்ணு.

  வங்கி ஊழியர் சம்மேளனம் சி.பி.கிருஷ்ணன், விவசாய சங்க கூட்டு இயக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் இரா.லெனின், சட்ட ஆலோசகர் வக்கீல் கே.பாலு, திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழ்த் தேசிய பேரியக்கம் பெ.மணியரசன், புதுச்சேரி வர்த்தக சங்க தலைவர் எம்.கே.ராமன், தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் மாநில செயலாளர் சி.கே.மதிவாணன், பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜி.சங்கரன் உள்பட பலர் சிறப்புரையாற்றுகின்றனர்.

  மாநாட்டில் கூடங்குளம் சுப.உதயகுமார், தூத்துக்கடி பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் தலைமையில் என்ன செய்யப்போகிறோம்... நாம்? என்ற தலைப்பில் விவாத அரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  முன்னதாக காலை 9 மணிக்கு மாநாட்டு பந்தலில் காஞ்சீபுரம் எம்.கோபால் நாயக்கர் தேசிய கொடி ஏற்றுகிறார். ஆர்.நாராயணன் செட்டியார் வணிகக் கொடி ஏற்றுகிறார். மாநாட்டு பந்தலை பல்லவன் பொறியியல் கல்லூரி தாளாளர் பா.போஸ் திறந்து வைக்கிறார். தங்கம் வெள்ளையன், ஸ்ரீதேவி ராமகிருஷ்ணன், நர்மதா சம்பத், செல்வி விஸ்வநாதன், ஜெயராணி ராஜகோபால் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றுகிறார்கள்.

  மாநாட்டில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ப.தேவராஜ், காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் எம்.ராமகிருஷ்ணன், வியாசை மணி, மணலி டி.ஏ.சண்முகம், எச்.ஷாரூண் ரஷித், ஜி.அரிகிருஷ்ணன், மீஞ்சூர் டி.ஷேக் அகமது, பி.தனசேகரன், எஸ்.ஆர்.பி. ராஜன், தங்கதுரை, பெரம்பூர் ரெங்கசாமி நாடார், ஓட்டேரி ஜோதிராம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

  மாநாடு குறித்து த.வெள்ளையன் கூறியதாவது:-

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நாளை காஞ்சீபுரத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் வணிகர்கள் கார், வேன், பஸ்களில் வந்து கலந்து கொள்கிறார்கள்.

  மாநாட்டை முன்னிட்டு நாளை (5-ந் தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. வணிகர்கள், வியாபாரிகள் குடும்பத்தினருடன் பங்கேற்கிறார்கள். மாநாட்டுக்கு வரும் வணிகர்களுக்கு உணவு, குடிநீர், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

  மாநாட்டையொட்டி பல்லவன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல், அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

  மாநாட்டில், அந்நிய ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் பாரம்பரிய வணிகம், விவசாயம், சுயதொழில்களை பாதுகாக்க முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் படுகின்றன.

  இவ்வாறு த.வெள்ளையன் கூறினார். #tamilnews

  Next Story
  ×