என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழிங்கநல்லூர் நட்சத்திர ஓட்டலில் ஊழியர் படுகொலை
    X

    சோழிங்கநல்லூர் நட்சத்திர ஓட்டலில் ஊழியர் படுகொலை

    சோழிங்கநல்லூரில் பிரபல ஓட்டலில் வாடிக்கையாளர்கள் கண் முன்னே ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ரோபாட் நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது.

    இங்கு டார்ஜிலிங்கைச் சேர்ந்த யுனஸ், அணில்குரு ஆகிய 2 பேர் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். அவர்களிடையே வாடிக்கையாளர்களிடம் ‘டிபஸ்’ வாங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

    ஆத்திரம் அடைந்த அணில்குரு, ஓட்டலில் இருந்த கத்தியை எடுத்து யுனஸ்சை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த யுனஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதை பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓட் டம் பிடித்தனர்.

    இதுகுறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து யுனஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளி அணில் குருவை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். இது தொடர்பாக ஓட்டல் ஊழியர்கள், நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×