என் மலர்

  செய்திகள்

  பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய மேலும் ஒரு ஆடியோ உரையாடல்: வாட்ஸ்-அப்பில் பரவுகிறது
  X

  பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய மேலும் ஒரு ஆடியோ உரையாடல்: வாட்ஸ்-அப்பில் பரவுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்ஸ் புகாரில் சிக்கிய கால்நடைத்துறை இயக்குனர், பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய மேலும் ஒரு ஆடியோ உரையாடல் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது.

  புதுச்சேரி:

  செக்ஸ் புகாரில் சிக்கிய புதுவை கால்நடைத்துறை இயக்குனர் பத்மநாபன் ஏற்கனவே டாக்டர் ராணி மற்றும் மாகியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் செல்போனில் ஆபாசமாக பேசிய உரையாடல் வெளியாகி இருந்தது. இந் நிலையில் தற்போது மாகி பெண் ஊழியரிடம் கால்நடைதுறை இயக்குனர் பத்மநாபன் செல்போனில் பேசிய மற்றொரு உரையாடல் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது.

  பெண்: குட் ஈவ்னிங் சார்.

  இயக்குனர்: ஏம்மா.

  பெண்: 5 நாட்கள் விடுமுறை வேண்டும்.

  இயக்குனர்: சரிம்மா, என்னுடைய இன்னொரு மொபைல் நம்பர் உள்ளதா?

  பெண்: அந்த நம்பரை நான் சேமிக்கவில்லை.

  இயக்குனர்: நீ ஏன் சேமித்து வைக்கப்போற? நீ கண்டவன் நம்பர் எல்லாம் வெச்சிருப்ப. நீ யாருடன் பேசுறே என்ன செய்றே என்பதெல்லாம் எனக்கு தெரியும். நான் உன்னிடம் நேரில் பேச வேண்டும். நீ எங்க போனாலும் உன் நிறத்தை பார்த்தவுடன் அனைவரும் வழிகிறார்கள். உடனே நீ தலைகால் புரியாமல் பழகுறே. நீ நான் வந்தவுடன் வீட்டிற்கு வா. உன்னுடைய லீவு லெட்டர் எனக்கு பேக்ஸ்ல அனுப்பி வை. இந்த நம்பரில் பேச வேண்டாம். என்னுடைய வேறோரு நம்பரை சேமித்துக்கொள். இந்த நம்பரில் பேச வேண்டாம்.

  பெண்: குறித்துக்கொள்கிறேன். (அந்த எண்ணை சொல்கிறார்)

  இயக்குனர்: நீ ஒழுங்காக இருக்கீயா? எப்படி இருக்கிறே.

  பெண்: நல்லா இருக்கிறேன் சார்.

  இயக்குனர்: அடிங்கோ, ஒழுங்கா இருக்கிறியானு கேட்டா? நல்லா இருக்கிறன்னு சொல்ற.

  பெண்: இங்க எப்படி சார் நல்லா இருக்க முடியும்.

  இயக்குனர்: நீ கேட்கும் போதெல்லாம் உதவி செய்றேன். ஆனா நீ இப்படி பேசுறே.

  பெண்: நீங்க இங்க வந்து தனியா இருந்து பாருங்க.

  இயக்குனர்: என்னுடைய இன்னொரு நம்பருக்கு இரவு 11 மணிக்கு பேசு. நீ எத்தனை மணிக்கு தூங்குவ.

  பெண்: இரவு 10.30 மணிக்கு தூங்குவேன்.

  பெண்: மாத்திரை போட்டு தான் தூங்குறேன் சார்.

  இயக்குனர்: எத்தனை மாத்திரை போடுவ.

  பெண்: தூக்க மாத்திரை இல்லை.

  இயக்குனர்: இந்த வயசுலயே மாத்திரை போடுற.

  பெண்: இந்த மாத்திரை சாப்பிடுவதால் பிரச்சினை இல்லை.

  இயக்குனர்: சரி.சரி.சரி..

  இயக்குனர்: ஏம்மா, நான் மாகிக்கு வரவா?.

  பெண்: நீங்க இங்க வந்து ஒன்றும் செய்ய முடியாது. ஆஸ்பத்திரியை பாருங்க. இங்கிருந்து டிரான்ஸ்பார் பண்ணிவீட்டிருவீங்க.

  இயக்குனர்: தலச்சேரி வர ரூம் போடு. ஒரு நாள் தங்கி வந்த மாதிரி.

  பெண்: தலச்சேரியா? ஆர்.ஐ. கிட்ட சொல்லி ரூம் போடுறேன். நான் எங்கே போய் ரூம் போட முடியும்?

  இயக்குனர்: நானே ரூம் போட்டுகிறேன். காசுக்கு என்னம்மா பண்றே.

  பெண்: சம்பளம் வருதில்ல சார்.

  இயக்குனர்: நான் கஷ்டப்படுறேன் என்னை கவனிக்கக் கூடாதா?

  இத்துடன் ஆடியோ பாதியில் நின்றுவிடுகிறது. #TamilNews

  Next Story
  ×