என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் ஓட்டுப்பெட்டியில் மை ஊற்றியதால் கூட்டுறவு தேர்தல் ரத்து
சின்ன காஞ்சீபுரம் ஓட்டுப் பெட்டியில் மர்ம நபர்கள் மை ஊற்றியதால் தேர்தல் ரத்தானது. இதனை கண்டித்து தி.மு.க.வினர் வங்கி முன்பு போராட்டம் நடத்தினார்கள். #cooperativesocietieselection
காஞ்சீபுரம்:
சின்ன காஞ்சீபுரம் கூட்டுறவு அர்பன் வங்கியில் கூட்டுறவு சங்க நிர்வாககுழு உறுப்பினர்களின் தேர்தல் நேற்று நடந்தது. அப்போது யாரோ மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து வாக்கு சீட்டுகளை சேதப்படுத்தி, ஓட்டிப்பெட்டியில் மை ஊற்றி சேதப்படுத்தி, தேர்தல் பணியாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து ஆனதாக தேர்தல் அதிகாரி ராஜ் நந்தினி அறிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் ஆளும் கட்சியினர்தான் ஓட்டுப்பெட்டியை சேதப்படுத்தியதாக கூறி காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் நகர செயலாளர் சன் பிராண்டு கே.ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ஜி.சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். #cooperativesocietieselection
Next Story