என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் கிராவல் மண் திருடிய 2 பேருக்கு 8 கோடி ரூபாய் அபராதம்
    X

    ஈரோட்டில் கிராவல் மண் திருடிய 2 பேருக்கு 8 கோடி ரூபாய் அபராதம்

    ஈரோடு பகுதிகளில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய 2 பேருக்கு 8 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம மண் அள்ளப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கிராவல் மணல் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில்,  சேனாபதி, சுப்பிரமணி ஆகியோருக்கு 8 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #tamilnews
    Next Story
    ×